ETV Bharat / sitara

பரதநாட்டியம் ஆடி அசத்தும் 'தலைவி' கங்கனா - புகைப்படம் வெளியிட்ட ரங்கோலி - ரங்கோலி

'தலைவி' படத்தின் படப்பிடிப்பில் பரதநாட்டியம் ஆடி அசத்தும் கங்கனா ரணாவத்தின் புகைப்படத்தை அவரது சகோதரி ரங்கோலி பகிர்ந்துள்ளார்.

kangana
kangana
author img

By

Published : Feb 3, 2020, 11:06 AM IST

பாலிவுட் குயின் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'தலைவி' படத்தில் நடித்துவருகிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலிலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிவருகிறது. இதில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துவருகிறார். பிரியாமணி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தை அலங்கரிக்கும் கங்கனா அதற்காகப் பல மாதங்களாகத் தன்னை தயார்ப்படுத்திவந்தார். ஜெயலலிதாவின் உடல்மொழி, நடனம் உள்ளிட்ட பலவற்றை கற்று தற்போது படப்பிடிப்பில் உள்ளார்.

இதனிடையே கங்கனாவின் 'தலைவி' பட தோற்றம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுவரும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல், தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு பரதநாட்டியம் ஆடி அசத்தியுள்ள கங்கனாவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், புரட்சிகர தலைவியின் புகைப்படங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

kangana
'தலைவி' கங்கனா

நடன நாட்டிய மங்கையர்களுடன் இணைந்து பரதநாட்டியம் ஆடியுள்ள கங்கனாவின் தோற்றம் ஜெயலலிதாவின் 70ஸ் காலகட்டத்தை நினைவுபடுத்தும்வகையில் அமைந்துள்ளது.

'தலைவி' படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

'விவசாயின்னா பிரச்னை இருக்கத்தான் செய்யும்' - நடிகர் அப்புகுட்டி

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/rangoli-shares-sister-kanganas-captivating-look-from-thalaivi/na20200202205353981

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.