பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' என்ற படத்தினை தயாரித்து வருகிறார்.
![Randaam ulagaporin kadaisi gundu movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/img-20190317-wa00101552807818695-14_1703email_00202_229.jpg)
பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை என்பவர் இயக்கும் இப்படத்தில் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் படப்படிப்பு நிறைவடைந்ததால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
![Randaam ulagaporin kadaisi gundu movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/img-20190317-wa00131552807818691-66_1703email_00202_171.jpg)
இந்நிலையில் படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை, 'திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருப்பதாகவும், விரைவில் படத்தின் போஸ்ட் புரொடஷன் பணிகளான எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. இந்தப் படம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக நிச்சயமாக இருக்கும்' என்றும் தெரிவித்தார்.