புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்றிருந்தனர் நட்சத்திர ஜோடியான ஆலியாவும் ரன்விர் கபூரும். இதையடுத்து தங்களது சமூக வலைதளங்களில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.
இந்த சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஆலியாவும் ரன்பிரும் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்கள் இருவரையும் சுற்றி ரசிகர்கள் சுழ்ந்தனர். இருவரும் தங்களது திருமணச் செய்தியை பகிர்ந்துகொண்டதையடுத்து, பல இடங்களில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்ட செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
இயக்குநர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் வரும் மே மாதம் வெளியாகவுள்ள 'பிரம்மாஸ்த்ரா' திரைப்படத்தில் ஆலியாவும் ரன்பிரும் ஜோடியாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதன்முதலாக அறிமுகமான படத்தை நினைவுகூறும் ரித்தேஷ்-ஜெனிலியா