லீடர், சம்திங் சம்திங் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலியில் பல்வாள் தேவனாக நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி. இவர் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும், தனது அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனால் டோலிவுட்டில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களிலும் அவரைப் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை (4 மில்லியன்) எட்டியுள்ளது.
இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ராணா, "தற்போது படை வீரர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று மகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் காடன் (தமிழ்) படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துவருகிறார். இந்தப் படத்தை ராணா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
!