ETV Bharat / sitara

பிரபாஸ் சவாலை ஏற்ற ராணா! - Latest cinema news

நடிகர் பிரபாஸ் விடுத்த மரக்கன்றுகள் நடும் சவாலை ஏற்று, நடிகர் ராணா தனது தோட்டத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு அதன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ராணா
ராணா
author img

By

Published : Aug 20, 2020, 1:39 PM IST

இந்தியாவில் சமீபகாலமாக மரக்கன்றுகள் நடும் சவால் ட்ரெண்டாகி வருகிறது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் #greenindiachallenge என்ற ஹேஷ் டேகைப் பயன்படுத்தி மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். மேலும் தாங்கள் மரக்கன்றுகள் நடுவதை புகைப்படம் எடுத்து, இந்தச் சவாலை செய்யுமாறு பிற திரையுலகப் பிரபலங்களை டேக் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த சவாலில் கலந்து கொண்டு தனது தோட்டத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராணா
மரக்கன்றுகள் நடும் ராணா

அதில், "சிறிது தாமதம் தான், இருந்தாலும் செய்து முடித்துவிட்டேன். ’ஆதிபுருஷ்’ பிரபாஸ், மற்றொன்று ராக் ஸ்டார் ஸ்ருதிஹாசன். இவர்களது சவாலை ஏற்றுக்கொண்டு இதை செய்துள்ளேன். என்னைப் பின்தொடரும் ஒவ்வொருக்கும் நான் 'கிரீன் இந்தியா சவாலை விடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு, நாக சைதன்யா, நடிகைகள் சமந்தா, ராஷ்மிகா உள்ளிட்டோர் இந்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.