சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தை இயக்குனர் என். லிங்குசாமி இயக்கி வருகிறார். நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தேவி ஶ்ரீ பிரசாத் பிறந்த நாளான நேற்று அவருக்கு நடிகர் ராம் பொத்தினேனி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகபேரால் பகிரப்பட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகும் #RAP019 படத்தின் தமிழ்நாடு உரிமையை ‘மாஸ்டர் பீஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’தேசத்தைவிட மொழிதான் முக்கியம்’ - ஜி.வி.பிரகாஷ்