இயக்குநர் லிங்குசாமி 'சண்டைக்கோழி 2' படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு '#RAPO19' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகிறது.
-
#RAPO19⚡Shoot Begins
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv @PulagamOfficial #RAPO19ShootBegins pic.twitter.com/nAuyJxnk44
">#RAPO19⚡Shoot Begins
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 12, 2021
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv @PulagamOfficial #RAPO19ShootBegins pic.twitter.com/nAuyJxnk44#RAPO19⚡Shoot Begins
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 12, 2021
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv @PulagamOfficial #RAPO19ShootBegins pic.twitter.com/nAuyJxnk44
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படம் குறித்தான அறிவிப்பு வெளியான நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை.12) தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு தயார் செய்த கதையை தெலுங்கில் எடுக்கும் லிங்குசாமி!