ETV Bharat / sitara

கோடை நேரத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மியா மல்கோவாவின் 'க்ளைமேக்ஸ்' டீஸர் - மியா மல்கோவாவின் படங்கள்

வெளிநாட்டு நடிகை மியா மல்கோவாவை வைத்து இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கிய 'க்ளைமேக்ஸ்' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

rgv
rgv
author img

By

Published : May 15, 2020, 10:06 PM IST

திரைப்படம், அரசியல், விளையாட்டு என அன்றாட நிகழ்வுகளை வைத்து சர்ச்சையான ட்வீட்டுகளை பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்பவர், இயக்குநர் ராம் கோபால் வர்மா. தற்போது உலகம் முழுவதும் கரோனா பீதி தொற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான கருத்துகள், வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

அதே நேரத்தில் திறமை உள்ள நபர்களை பிரபலமாக மாற்றுவதிலும் ராம் கோபால் வர்மா தயங்குவது இல்லை. நாகார்ஜூனா, விவேக் ஓபராய், அபிஷேக் பச்சன், ஊர்மிளா மாடோண்ட்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்குத் தொடக்க காலத்தில் ராம் கோபால் வர்மா பல முக்கியக் கதாபாத்திரங்களை வழங்கி, அவர்களது திறமைகளை திரையில் வெளிக்கொண்டு வந்தார்.

தற்போது ராம் கோபால் வர்மா வெளிநாட்டு நடிகை மியா மல்கோவாவை (MiaMalkova) வைத்து க்ளைமேக்ஸ் (Climax) என்னும் படத்தை இயக்கியுள்ளார். கோடைகாலத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், உச்சகட்ட கவர்ச்சியில் இப்படம் உருவாகியுள்ளது. பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட மியா, அங்கு சந்திக்கும் பிரச்னைகளை காட்சிப்படுத்தியுள்ளார். தற்போது இப்படத்தின் டீஸர் வெளியானது. ட்ரெய்லர் மே 18ஆம் தேதி வெளியாகும் என டீஸரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனைவியுடன் மட்டும் தான் நேரத்தை செலவிட முடிகிறது - சர்ச்சை இயக்குநர் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.