இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'என்ஜிகே'. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.
அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டு பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது.
இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் செல்வராகவன் குறித்து கூறியதாவது, செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வித்தியாசமானவர். நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர்.
ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார்.
அவர் மூன்று நொடி விதி என்று ஒன்றை வைத்திருக்கிறார். அதாவது ஒருவர் வசனம் பேசி முடித்ததும், மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக் கூடாது. மூன்று நொடிகள் தாமதித்துத்தான் ஆரம்பிக்க வேண்டும், ஒருவேளை அதை மறந்து விட்டு நடிக்க ஆரம்பித்தால், ‘கட்’ சொல்லி திரும்ப ஆரம்பிக்கச் சொல்வார்.
பொதுவாக நான் நடித்த படங்களை படம் வெளியாகும் நாளில் திரையங்கத்திற்கு சென்று பார்ப்பேன். இப்படத்தையும் மே 31 அன்று மும்பையில் பார்க்க உள்ளேன் என்று கூறினார்.