தெலுங்கு திரை நட்சத்திரம் மகேஷ் பாபு, தனது பிறந்த நாளில் சமூக வலைத்தளத்தில், #GreenIndiaChallengeஐ ட்ரெண்ட் ஆக்கினார். இந்த சேலஞ்சை தெலங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார்தான் முதலில் அறிமுகப்படுத்தினார்.
இந்தச் சேலஞ்சில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அது குறித்து எடுத்துச் சொல்லி, மரக்கன்றுகள் நடுவதற்கு பிறரையும் தூண்ட வேண்டும்.
அதன்படி தனது பிறந்தநாளில், மரக்கன்றுகளை நட்ட மகேஷ் பாபு, நடிகர் விஜய், ஸ்ருதி ஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், இந்தச் சேலஞ்சை ஏற்ற விஜய், மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. விஜய்யைத் தொடர்ந்து பல பிரபலங்களும் அவர்களது ரசிகர்களும் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தவண்ணம் உள்ளனர்.
-
Late but finally accepted #HaraHaiTohBharaHai #GreenindiaChallenge
— Rakul Singh (@Rakulpreet) November 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you @chay_akkineni for nominating me .so I have Planted 3 saplings. Further I want to nominate not actors but all my fans
to plant 3 trees each and tag me to continue the chain. pic.twitter.com/QFdsRKWcji
">Late but finally accepted #HaraHaiTohBharaHai #GreenindiaChallenge
— Rakul Singh (@Rakulpreet) November 11, 2020
Thank you @chay_akkineni for nominating me .so I have Planted 3 saplings. Further I want to nominate not actors but all my fans
to plant 3 trees each and tag me to continue the chain. pic.twitter.com/QFdsRKWcjiLate but finally accepted #HaraHaiTohBharaHai #GreenindiaChallenge
— Rakul Singh (@Rakulpreet) November 11, 2020
Thank you @chay_akkineni for nominating me .so I have Planted 3 saplings. Further I want to nominate not actors but all my fans
to plant 3 trees each and tag me to continue the chain. pic.twitter.com/QFdsRKWcji
சமீபத்தில் இந்தச் சேலஞ்சை ஏற்று அதனை செய்து முடித்த தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தனது சவாலை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த சாவலை ஏற்ற ரகுல், தற்போது மூன்று மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளார். மேலும் இதை செய்யுமாறு சாவல்விடுத்த நாகசைதன்யாவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேலஞ்சை எந்தப் பிரபலங்களும் விடுக்காமல் தனது ரசிகர்கள் அனைவருக்கும் பொதுவாக விடுத்துள்ளார்.