ETV Bharat / sitara

பாயும்புலியின் அடுத்த படத்தை இயக்கும் சிறுத்தை சிவா - Rajini next movie director

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

rajini
author img

By

Published : Oct 11, 2019, 1:27 PM IST

Updated : Oct 11, 2019, 6:56 PM IST

நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் 'தர்பார்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மும்பை போலீஸ் அலுவலராக தோன்றும் ரஜினியுடன் யோகி பாபு, தம்பி ராமைய்யா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்று ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறவிப்பில் நடிகர் ரஜினி காந்தின் 168ஆவது திரைப்படத்தை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதனை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் நடிப்பில் வெளியான எந்திரன், பேட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக ரஜினியின் படத்தை தயாரிக்கிறது.

நடிகர் கார்த்தியின் சிறுத்தை படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் சிவா, அதன்பின் நடிகர் அஜித்தின் படங்களை மட்டுமே இயக்கினார். அவர் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு அஜித் படங்களை இயக்கினார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவா முதன்முறையாக அஜித்தை தவிர்த்து சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளார். அவர் கடைசியாக இயக்கியிருந்த விஸ்வாசம் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ரஜினியின் புதிய படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்தும், இசையமைப்பாளர் குறித்தும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Intro:Body:Conclusion:
Last Updated : Oct 11, 2019, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.