மறைந்த இயக்குநர் மகேந்திரன் முதன்முதலாக இயக்கிய படம் ‘முள்ளும் மலரும்’. 1978ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ரஜினி, ஷோபா, சரத்பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரஜினியின் திரைப்பயணத்தில் இன்றளவும் முக்கியமான படமாக இது கருதப்படுகிறது.
இப்படத்தில் ரஜினி, காளி எனும் கோபக்கார இளைஞனாக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் கைகளை இழந்த காளி தனது உயர் அதிகாரியிடம் , "ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட இந்தக் காளி பொழச்சுக்குவான் சார்... கெட்ட பயசார் அவன்" என்று கூறுவார். இந்த வசனம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
-
For all Thalaivar fans, Appa's very own handwriting. #Rajinkanth #Rajini @thalaivar1994 @rajinikanth pic.twitter.com/8lSfecVqv5
— Dir.JohnMahendran (@johnroshan) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">For all Thalaivar fans, Appa's very own handwriting. #Rajinkanth #Rajini @thalaivar1994 @rajinikanth pic.twitter.com/8lSfecVqv5
— Dir.JohnMahendran (@johnroshan) March 23, 2020For all Thalaivar fans, Appa's very own handwriting. #Rajinkanth #Rajini @thalaivar1994 @rajinikanth pic.twitter.com/8lSfecVqv5
— Dir.JohnMahendran (@johnroshan) March 23, 2020
தற்போது இந்த வசனத்தை மகேந்திரன் தனது கைப்பட நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்த புகைப்படம் ஒன்றை அவரது மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அனைத்து தலைவர் ரசிகளுக்கும் அப்பாவின் சொந்த கையெழுத்து என பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.