காட்டுக்குள் சென்று எப்படி உயிர் வாழ்வது என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் டிஸ்கவரி தொலைக்காட்சி மேன் vs வைல்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் பிரதமர் மோடியை தொடர்ந்து சமீபத்தில் ரஜினிகாந்த், பியர் கிரில்ஸுடன் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் காட்டிற்குச் சென்றிருந்தார்.
இதையடுத்து இந்நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள நிலையில், தற்போது நிகழ்ச்சியின் ஒரு சில காட்சிகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி, கிரில்ஸுக்கு ஈடு கொடுத்து பல்வேறு சாகசங்களைச் செய்துள்ளார். மேலும் இடையிடையே இருவரும் உரையாடும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
-
Two phenomenal personalities talk about life and nature during a real adventure. Watch Into The Wild with @BearGrylls and Superstar @Rajinikanth as they journey through the jungle. Premieres 23 March at 8 PM. #ThalaivaOnDiscovery
— Discovery Channel IN (@DiscoveryIN) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Co-powered by: @pharmeasyapp pic.twitter.com/kecKunzjpv
">Two phenomenal personalities talk about life and nature during a real adventure. Watch Into The Wild with @BearGrylls and Superstar @Rajinikanth as they journey through the jungle. Premieres 23 March at 8 PM. #ThalaivaOnDiscovery
— Discovery Channel IN (@DiscoveryIN) March 20, 2020
Co-powered by: @pharmeasyapp pic.twitter.com/kecKunzjpvTwo phenomenal personalities talk about life and nature during a real adventure. Watch Into The Wild with @BearGrylls and Superstar @Rajinikanth as they journey through the jungle. Premieres 23 March at 8 PM. #ThalaivaOnDiscovery
— Discovery Channel IN (@DiscoveryIN) March 20, 2020
Co-powered by: @pharmeasyapp pic.twitter.com/kecKunzjpv
இந்நிலையில் பியர் கிரில்ஸ், ரஜினியிடம் எப்படி சினிமாவில் நுழைந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ரஜினி, ”நான் முதன்முதலில் பஸ் கண்டக்டராக இருந்தேன். பிறகு பாலச்சந்தர் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தேன்” என்றார்.
இதையடுத்து நாட்டில் தற்போது தலைவிரித்து ஆடும் தண்ணீர் பிரச்னை குறித்து இருவரும் விவாதித்தனர். அந்த இரண்டு நிமிட வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: ’நிசப்தம்' வெளியாகும் தேதி ஒத்திவைப்பு!