ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும், கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் திரைப்படம் 'அந்தநாள்'. இயக்குநர் விவீ இயக்கும் இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். மேலும், நடிகர் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், 'அந்தநாள்' திரைப்படம் வெற்றி பெறவும் ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
![rajinikanth](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4914981_andhanaal.jpg)
இந்த நிகழ்ச்சியில் ஏவிஎம் சரவணன், இயக்குநர் SP. முத்துராமன், நடிகர் ஆர்யன் ஷாம், இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![anthanaal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4914981_andhanaal2.jpg)