ETV Bharat / sitara

ஸ்டைலாக வெளியான சூப்பர்ஸ்டாரின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' டீஸர்! - ரஜினியின் டீஸர் மேன் வெர்சஸ் வைல்ட்

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' தொடரின் இரண்டாம் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

Rajini
Rajini
author img

By

Published : Mar 9, 2020, 12:24 PM IST

ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற ’மேன் வெர்சஸ் வைல்ட்’ படப்பிடிப்பில் சமீபத்தில் பங்கேற்றிருந்தார். இதுமட்டுமின்றி, படப்பிடிப்பில் ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உலகம் முழுவதும் ட்ரெண்டான இந்நிகழ்ச்சியானது, மார்ச் 23 ஆம் தேதி ஒளிப்பரப்படும் என டிஸ்கவரி சேனல் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து, டீஸர் ஒன்றை வெளியிட்டிருந்தது.

தற்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் சிறு தொகுப்பை இரண்டாவது டீஸராக வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த், தனது முன் இருக்கும் ஒவ்வொரு சவால்களையும் இடைவிடாமல் முழு உத்வேகத்துடன் செய்கிறார்.

எந்த சாவலையும் அவர் விடவில்லை என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரஜினி பியர் கிரில்ஸூடன் மலை ஏறுகிறார். பின் வாகனத்தில் அதிரடி சாகசம் செய்து காட்டுகிறார். பின் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போடுகிறார் ரஜினி. இந்த டீஸர் முழுவதில் ரஜினியின் ஸ்டைல் வெளிப்படுவதால் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அண்ணாத்த' ஸ்கிரிப்ட் அஜித்துக்கு தெரியும் - இணையவாசிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.