ETV Bharat / sitara

ரஜினியின் 'அண்ணாத்த': சான்றிதழ் வழங்கிய தணிக்கைக் குழு - அண்ணாத்த தணிக்கை சன்றிதழ்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்திற்குத் தணிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Annaatthe
Annaatthe
author img

By

Published : Oct 16, 2021, 1:05 PM IST

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடந்துமுடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இப்படத்தின் போஸ்டர்கள், இரண்டு பாடல்கள் ஆகியவை வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து இரு நாள்களுக்கு முன்பு வெளியான டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டீசரில், ரஜினி வேட்டி சட்டையுடன் முறுக்கு மீசையில் மாஸாக தோன்றியுள்ளார். மேலும் "கிராமத்தான குணமாத்தான பாத்துருக்க. கோவப்பட்டு பாத்தது இல்லேயே, கோபம் வந்த காட்டாறு. அவனக்குக் கரையும் இல்ல. தடையும் இல்ல" என்று ரஜினி பேசிய வசனம் படம் கிராமத்துப் பின்னணியில் குடும்பக் கதையுடன் அதிரடியாக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், 'அண்ணாத்த' படத்திற்குத் தணிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படம் தெலுங்கில் 'பெத்தண்ணா' என்ற பெயரில் வெளியாகிறது.

இதையும் படிங்க: மகனுடன் ரஜினியை எதிர்க்கும் சீயான் விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.