நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்ததையடுத்து, அவரது ரசிகர்கள் முழுமூச்சுடன் அதுகுறித்த பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இந்ந நிலையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கரோனா ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியது.
இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றார் ரஜினி. படப்பிடிப்பில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்படவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிக்கும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலும் நெருங்கி வந்த நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என ரஜினி அறிவித்தார்.
இந்த செய்தி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. தனது நிலைப்பாடு குறித்து ரஜினி வெளியிட்ட அறிக்கையில், சில வரிகள் இவ்வாறு இருக்கும். இந்தக் கரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்துகொண்டிருக்கிறது.
அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னை குறித்து பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை என தெரிவித்திருந்தார். அவரது இந்த வார்த்தைகள்தான் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் சொன்னது போலவே இன்று கரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ளது. இதுகுறித்து அன்றே சொன்ன ரஜினி என்று ரஜினி கூறியக் கருத்தினை ரசிகர்கள் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.
இதையும் படிங்க: பிக்பாஸ் முகனின் வேலன் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!