சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது மாறு வேடத்தில் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டவர். பெரும்பாலும் அவரை ஒரு சில ஹோட்டல்களில் காணலாம். உடல்நலக் குறைவு காரணமாக அவர் முன்புபோல் அதிகமாக வெளியே செல்வதில்லை என கூறப்படுகிறது.
எனினும், தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் அவர் சரிவர மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தனது பல் மருத்துவரை சந்தித்து வழக்கமான சோதனைகளை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் மருத்துவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படதை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி, அங்கு தனது ரசிகர் ஒருவர் குடும்பததை புகைப்படம் எடுத்துக்கொண்டது சமீபத்தில் வைரலானது. தற்போது இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீஸர் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘அண்ணாத்த’ டப்பிங் பணிகளை முடித்துவிட்டு ரஜினி ஓய்வெடுப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 14 Years Of Epic Chak De India: ஷாருக்கானா... கபீர்கானா?