நடிகர் ரஜினிகாந்த்துக்கு அக்டோபர் 25ஆம் தேதி டெல்லியில் நடைப்பெர்ற 67ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” என்று கூறினார். மேலும், “தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குநர் கே. பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன்” என்றும் கூறினார்.
இந்நிலையில், திரைப்பிரபலங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய ரஜினியை அக்டோபர் 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனுக்கு நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.
-
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. pic.twitter.com/0pFheNjnFd
— Rajinikanth (@rajinikanth) October 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. pic.twitter.com/0pFheNjnFd
— Rajinikanth (@rajinikanth) October 27, 2021மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. pic.twitter.com/0pFheNjnFd
— Rajinikanth (@rajinikanth) October 27, 2021
மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் அன்றைய தினம் ரஜினியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், தற்போது ரஜினி மோடியை தனது மனைவி லதாவுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரஜினி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதனுடன், "மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி." எனப் ரஜினி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வாழ்த்துகள் 'தலைவா' - ரஜினியை வாழ்த்தி சச்சின் ட்வீட்!