'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களை தொடர்ந்து பா.ரஞ்சித் முதன் முறையாக ரஜினியை வைத்து 'கபாலி' படத்தை இயக்கினார். இதே நாளில் (ஜூலை.22) கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ஜான்விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சந்தோஷ் சிவன் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். கபாலி படத்தில் ரஜினியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
'கபாலி' திரைப்படம் இன்றுடன் (ஜூலை.22) வெளியாகி ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து கலைப்புலி தாணு தனது ட்விட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உங்களுடன் நான் பயணித்த நாட்கள் என்றும் என் வாழ்வில் மறக்க முடியாத வசந்த காலங்கள் என பதிவிட்டுள்ளார்.
-
சூப்பர் ஸ்டார் @rajinikanth, உங்களுடன் நான் பயணித்த நாட்கள் என்றும் என் வாழ்வில் மறக்க முடியாத வசந்த காலங்கள். #5YearsOfKabali #SuperstarRajinikanth https://t.co/NP05M7R7RX
— Kalaippuli S Thanu (@theVcreations) July 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சூப்பர் ஸ்டார் @rajinikanth, உங்களுடன் நான் பயணித்த நாட்கள் என்றும் என் வாழ்வில் மறக்க முடியாத வசந்த காலங்கள். #5YearsOfKabali #SuperstarRajinikanth https://t.co/NP05M7R7RX
— Kalaippuli S Thanu (@theVcreations) July 22, 2021சூப்பர் ஸ்டார் @rajinikanth, உங்களுடன் நான் பயணித்த நாட்கள் என்றும் என் வாழ்வில் மறக்க முடியாத வசந்த காலங்கள். #5YearsOfKabali #SuperstarRajinikanth https://t.co/NP05M7R7RX
— Kalaippuli S Thanu (@theVcreations) July 22, 2021
இவரின் ட்விட்டையடுத்து நெட்டிசன்கள் #5YearsOfKabali என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: படுக்கையறை காட்சி வெளியீடு: மறுபடியும் அதே புராணத்தை பாடிய 'ராதிகா ஆப்தே'