ETV Bharat / sitara

'காசு, புகழ வைச்சு என்ன பண்ண?' - வருத்தத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்? - ரஜினி மகள் விவாகரத்து

தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி பிரிவதாக நேற்றிரவு அறிவித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/18-January-2022/14214611_rajinii.jpeg

author img

By

Published : Jan 18, 2022, 9:28 AM IST

கடந்த 2004ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு தாங்கள் இருவரும் பிரிந்து அவரவர் பாதையில் தனித்தனியே செல்ல இருப்பதாக தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பலரும், இத்தம்பதிக்கு பாசிட்டிவ், நெகடிவ் கமெண்டுகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனால் பல்வேறு தரப்பினரின் கவனமும் தற்போது ரஜினிகாந்தின் மீது திரும்பியுள்ளது.

ரஜினி ரசிகர் ட்விட்
ரஜினி ரசிகர் ட்விட்

அவரது ரசிகர்கள் பலரும், “அரசியல் கனவு நொறுங்கியது, முந்தைய படங்கள் தோல்வி, மகள் விவாகரத்து, உடல்நலன் பிரச்சனைகள் அனைத்தும் ஒரு மனிதனின் 71ஆவது வயதில்... மனஅமைதி இல்லையெனில் காசு, பணம் இருந்தும் பயனில்லை என புரிகிறது. எல்லாம் வல்ல இறைவன் இவை அனைத்தையும் தாங்கும் வலிமையை கொடுக்கட்டும்” என சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யாவின் பிரிவு முடிவால் ரஜினிகாந்த் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிகிறேன்; தனுஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.