ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இதில் பிரதிக் பாப்பர், சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பு பணிகளை கவனித்து வருகிறார்.
2020 பொங்கல் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ரஜினி டப்பிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையிலேயே சிறந்த டப்பிங் செசன்களில் ஒன்று.. தலைவரின் தர்பார் டப்பிங் முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
-
One of the best Dubbing sessions in my life... Thalaivar Darbar dubbing completed. 👏👏👏🙏 #DarbarThiruvizha @LycaProductions pic.twitter.com/CzSYc1aKti
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One of the best Dubbing sessions in my life... Thalaivar Darbar dubbing completed. 👏👏👏🙏 #DarbarThiruvizha @LycaProductions pic.twitter.com/CzSYc1aKti
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 18, 2019One of the best Dubbing sessions in my life... Thalaivar Darbar dubbing completed. 👏👏👏🙏 #DarbarThiruvizha @LycaProductions pic.twitter.com/CzSYc1aKti
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 18, 2019
இதையும் படிங்க: புத்தகம் குறித்து விளக்கம் கேட்கும் ரஜினி: வைரலான வீடியோ!