பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப் ஜோடி வரும் 9ஆம் திருமணம் செய்துகொள்கின்றது. ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் மூன்று நாள்கள் திருமணம் நடைபெறுகிறது.
இவர்களின் திருமணத்தையொட்டி டிசம்பர் 6 முதல் 12ஆம் தேதிவரை அங்குள்ள சவுத் மாதா கோயிலுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் பக்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ராஜஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் நைத்ராபிந்த் சிங் ஜாடூன் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தில் விக்கி - கத்ரீனா மீது புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், "சவுத் மாதா கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஹோட்டல் சிக்ஸ் சென்ஸ் அமைந்துள்ளது. இவர்களின் திருமணத்தையொட்டி ஹோட்டல் மேலாளர் கோயில் செல்லும் பாதையை மூடியுள்ளார்.
டிசம்பர் 6 முதல் 12ஆம் தேதிவரை கோயிலுக்குச் செல்ல முடியாததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் பக்தர்களின் உணர்வுகளைக் கருத்தில்கொண்டு, சவுத் மாதா கோயிலுக்குச் செல்லும் வழியைத் திறக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விக்கி - கத்ரீனா திருமணத்தில் இதற்குத் தடையாம்...!