பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதனையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன், 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்திருந்தார்.
இவரின் முதல் படமே வெற்றியடைந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ்ஷுடன் காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர், பொய்க்கால் குதிரை என வரிசையாக பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போது படு ஆக்டிவாக செயல்படும் ரைசா சமீபத்தில், ரசிகர்களுடன் வீடியோ கால் மூலம் உரையாடினார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர், 'லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரைசா, "லிவிங் டூ கெதர் வாழ்க்கை எனக்கு ஒகே தான். ஆனால் எனக்கு காதலன் இல்லையே. அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டும். அதனால் தான் நான் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: படக்குழுவினருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் தங்க நாணயம் பரிசளித்த சூர்யா