ETV Bharat / sitara

' நான் பேசியதற்கும், ரஜினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை '- ராகவா லாரன்ஸ்!

'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Raghava Lawrence
Raghava Lawrence
author img

By

Published : Dec 23, 2019, 10:36 AM IST

அந்த அறிக்கையில்,' 'தர்பார்' இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் 'இந்தி' படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால், எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாகப் பேட்டி கொடுப்பேன்.

நீங்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் பதிவிடும் ட்விட்டுகள், நான் பேசிய பேச்சு, இனிமேல் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துகள் மட்டுமே. என்னுடைய கருத்துகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ரஜினி சொல்லி தான், நான் பேசுவதாக சிலர் கூறுவது உண்மையற்றது. ஒருவரைத் தூண்டிவிட்டு பேச வைக்கக்கூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்தப் பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே.

நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. நான் எனது சேவையைச் செய்கிறேன். தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன். உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்னையில் இழுத்துச் செல்லப்பட்டேன்.

Raghava Lawrence
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

இதன் காரணமாக, எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டேன். எனது பிறந்த இடம், மொழி, எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு நான் பதிலளிப்பேன்.

என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு புரியவைக்க முயற்சிப்பேன்' என்று ராகவா லாரன்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி - காவல் ஆணையரிடம் புகார்

Intro:நான் இதுவரை பேசியதற்கும், இனிமேல் பேசப்போவதற்கும், நடிகர் ரஜினிகாந்த் திற்கும் சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் .
Body:நடிகர் ராகவா லாரன்ஸ் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசினால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்,

தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன். நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே. என்னுடைய கருத்துகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினி சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் கூறுவது உண்மையற்றது ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே தான். நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன், உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன். இதன் காரணமாக எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், அதற்கு நான் பதிலளிப்பேன். என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு புரியவைக்க முயற்சிப்பேன்.
Conclusion:அன்பு தான் தமிழ்
ராகவா லாரன்ஸ் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.