ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பெரும் பொருள்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, இத்தாலி, பாரீஸ் போன்ற வெளிநாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யூவி கிரியேஷன்ஸ் தயாரித்து வரும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், போன்றவை முன்னதாக சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
-
New Year. New Beginnings. And a New Release Date! 🌟💕#RadheShyam all set to release in a theatre near you on Makar Sankranti, 14th January 2022!
— Radhe Shyam (@RadheShyamFilm) July 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/YLdBvCauVu
">New Year. New Beginnings. And a New Release Date! 🌟💕#RadheShyam all set to release in a theatre near you on Makar Sankranti, 14th January 2022!
— Radhe Shyam (@RadheShyamFilm) July 30, 2021
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/YLdBvCauVuNew Year. New Beginnings. And a New Release Date! 🌟💕#RadheShyam all set to release in a theatre near you on Makar Sankranti, 14th January 2022!
— Radhe Shyam (@RadheShyamFilm) July 30, 2021
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/YLdBvCauVu
இந்நிலையில், ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பிரபாஸ், பூஜா ஹெக்டே இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக இப்படம் இன்று (ஜூலை.30) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரபாஸ் - தீபிகா படுகோனே படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்