ETV Bharat / sitara

ருத்ர தாண்டவத்தில் இணைந்த பிரபலம்! - இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்

மோகன் ஜி இயக்கும் மூன்றாவது படம் ருத்ர தாண்டவம். இதிலும் ரிச்சர்ட் நாயகனாக நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan G Rudrathandavam, Radharavi, Gautam Vasudev menon, மோகன்.ஜியின் ருத்ர தாண்டவம், நடிகர் ராதாரவி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், திரௌபதி
radha ravi onboard in Mohan G Rudrathandavam
author img

By

Published : Feb 24, 2021, 2:52 PM IST

இயக்குநர் மோகன் ஜி, பிரஜின் நடித்த 'பழைய வண்ணாரப்பேட்டை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அஜித்தின் உறவினரும் நடிகை ஷாலினியின் தம்பியுமான ரிச்சர்ட்டை வைத்து 'திரௌபதி' என்ற படத்தை இயக்கினார். இப்படம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் அதுவே இப்படத்திற்கு உறுதுணையாக அமைந்து, படமும் வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து மோகன் ஜி இயக்கும் மூன்றாவது படம் ருத்ர தாண்டவம். இதிலும் ரிச்சர்ட் நாயகனாக நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்திருந்தார். தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் ராதாரவி ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

இதையும் படிங்க: டீசரில் 'மோடி ஹீரோ' என்று வசனம் - 'வா பகண்டையா' இயக்குநருக்கு மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.