இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான 'பருத்திவீரன்' படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. இவர் தற்போது ’கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் விவேக் இயக்கும் இப்படத்தை ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இதில் பேபி சாராவும் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
’கொட்டேஷன் கேங்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (டிச.06) மும்பையில் மிகப் பிரமாண்டமாக தொடங்கியது. தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து இந்திய மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் சில முக்கிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் விவேக் கூறுகையில், ”கொட்டேஷன் கேங் படம் அனைத்திந்திய ரசிகர்களுக்கான கதை. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தொடர்ந்து 3 படங்கள் - படு பிஸியாக மாறும் தீபிகா படுகோனே!