நடிகர் விஜய், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மாஸ்டர்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். ’மாஸ்டர்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்துமுடிந்த நிலையில், பொது ஊரடங்கு காரணமாக படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும், விஜய் ரசிகர்கள் ’மாஸ்டர்’ பட ட்ரெய்லர் அப்டேட்டை வெளியிடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், இன்று (அக். 16) ’மாஸ்டர்’ பட இசையமைப்பாளரின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்துள்ளது.
ஆம்...மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’க்விட் பண்ணுடா’ (Quite pannuda) லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாள்களாக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, இது ஒரு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.
இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #Quitepannuda என்ற ஹேஷ் டேக்குடன் கொண்டாடிவருகின்றனர்.
இசை வெளியீட்டு விழாக்கு பின்னர் போனஸ் ட்ராக் ஆக இப்பாடல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'குட்டி ஸ்டோரி', 'வாத்தி கம்மிங்', பாடல்கள் ட்ரெண்டான நிலையில் இந்த பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'மாஸ்டர்' போனஸ் ட்ராக் 'க்விட் பண்ணுடா' வெளியீடு! - மாஸ்டர் பட பாடல்கள்
சென்னை: 'மாஸ்டர்' படத்தின் புதிய பாடலான 'க்விட் பண்ணுடா' தற்போது வெளியாகியுள்ளது.