தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், 'ரங்கஸ்தலம்' பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. புஷ்பா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
-
Gripping scenes between @alluarjun & #FahadhFaasil are being shot 🔥
— Pushpa (@PushpaMovie) October 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Witness the ultimate Face-Off between #PushpaRaj & #BhanwarSinghShekhawat on Big Screens From 17th DEC 2021.#PushpaTheRise #ThaggedheLe 🤙@iamRashmika @aryasukku @ThisIsDSP @adityamusic @MythriOfficial pic.twitter.com/togtU9OTpb
">Gripping scenes between @alluarjun & #FahadhFaasil are being shot 🔥
— Pushpa (@PushpaMovie) October 4, 2021
Witness the ultimate Face-Off between #PushpaRaj & #BhanwarSinghShekhawat on Big Screens From 17th DEC 2021.#PushpaTheRise #ThaggedheLe 🤙@iamRashmika @aryasukku @ThisIsDSP @adityamusic @MythriOfficial pic.twitter.com/togtU9OTpbGripping scenes between @alluarjun & #FahadhFaasil are being shot 🔥
— Pushpa (@PushpaMovie) October 4, 2021
Witness the ultimate Face-Off between #PushpaRaj & #BhanwarSinghShekhawat on Big Screens From 17th DEC 2021.#PushpaTheRise #ThaggedheLe 🤙@iamRashmika @aryasukku @ThisIsDSP @adityamusic @MythriOfficial pic.twitter.com/togtU9OTpb
சமீபத்தில், பன்வார் சிங் ஷேகாவாத் (ஐபிஎஸ்) கதாபாத்திரத்தில் மொட்டைத் தலையுடன் ஆக்ரோஷமான பார்வையுடன் ஃபகத் பாசில் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அதே போல் ராஷ்மிகா மந்தனாவும் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அல்லு அர்ஜூன், பகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்று (அக்.04) தொடங்கின.
இதையும் படிங்க: 'புஷ்பா'வின் 'ஸ்ரீவள்ளி'யான ராஷ்மிகா : வெளியான ஃபர்ஸ்ட் லுக்