புனித் ராஜ்குமார் இன்று (அக்.29) காலை மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கன்னட திரையுலகில் 49 படங்கள் நடித்த புனித் ராஜ்குமார், தனது தந்தை ராஜ்குமார் போல் கண்களை தானம் செய்துள்ளார்.
புனித்தின் தந்தை ராஜ்குமார் மறைவுக்குப் பிறகு, அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் அவரது மகன்கள், 'ராஜ்குமார் பெயரில் அறக்கட்டளை தொடங்கினர்.
புனித் தனது தந்தை ராஜ்குமார் போலவே கண் தானம் செய்வதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு!