ஜோயல் சோசா இயக்கத்தில் அலெக் பால்ட்வின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரஸ்ட்'. இப்படத்தை அலெக் பால்ட்வினே தயாரித்தும் வருகிறார்.
![Alec Baldwin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13424277_p.jpg)
'ரஸ்ட்' படத்தின் காட்சிகள் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவில் அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டு வந்தன. 'ரஸ்ட்' படத்தில், அலெக் பால்ட்வின் துப்பாக்கியால் சுடும் காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இதற்காக படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் போலி துப்பாக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டன.
![Alec Baldwin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13424277_pp.jpg)
அப்போது அலெக் பால்ட்வின் போலி துப்பாக்கியால் சுட்டப்போது எதிர்பாராத விதமாக பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் உயரிழந்தார்.
இந்த விபத்தில் இயக்குநர் ஜோயல் சோசா படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![Alec Baldwin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13424277_ppp.jpg)
'ரஸ்ட்' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட இந்த விபத்து ஹாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் மாதம் ரஸ்ட் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது இந்த சம்பவத்தால் ரஸ்ட் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
![Alec Baldwin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/ap21295031829004_2210newsroom_1634878342_428.jpg)
முன்னதாக 'தி கிரோ' படப்பிடிப்பிலும் இதுபோன்ற துப்பாக்கியை பயன்படுத்தும் காட்சி படமாக்கப்பட்ட போது புருஸ் லீயின் மகன் பிரான்டன் லீ உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருது வாங்கும் 'அண்ணாத்த' ரஜினி!