தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிம்பு. சில பிரச்சினைகளின் காரணமாக நீண்ட நாள்களாகப் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தாமல் இருந்த சிம்பு, 'ஈஸ்வரன்' படத்தின் மூலமாகத் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார்.
இருப்பினும் அத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து சிம்புவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
அதன்படி கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’, கோகுல் இயக்கத்தில் கரோனா குமார் உள்பட பெயரிடப்படாத சில படங்களில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் தீவிரமாக நடித்துவந்தார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் மற்ற படங்களில் சிம்பு இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகியதையடுத்து, அந்நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார். இதனால் வாரத்திற்கு ஒரு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சிம்பு கால்ஷீட் கொடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு திட்டமிடப்பட்டதைவிட தாமதமாக நடைபெற்றுவருகிறது.
இதனால் சிம்பு நடிப்பதாக ஒப்புக்கொண்ட பிற படங்களின் படப்பிடிப்புத் தாமதமாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் படத் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'வலிமை' முதல் நாள் வசூல் - ரஜினியை முந்திய அஜித்!