ETV Bharat / sitara

சந்தானத்திடம் வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர் கே.ராஜன் - தயாரிப்பாளர் கே ராஜன்

'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தின் தயாரிப்பாளருக்கு உடல்நிலை சரியில்லாதால் அப்படத்தை சந்தானம் முடித்து தருமாறு பாதம் தொட்டு கேட்டுகொள்வதாக தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.

Producer k.Rajan
Producer k.Rajan
author img

By

Published : Jan 29, 2020, 10:31 PM IST

சந்தானம் நடிப்பில் 'டகால்டி', 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவதாக இருந்ததால் பிரச்னை ஏற்பட்ட நிலையில், அதனை சுமூகமான முறையில் தீர்த்த பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.செளத்திரி மற்றும் சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், ஜனவரி 31ஆம் தேதி சர்வர் சுந்தரம், டகால்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் ஒரே கதாநாயகன் நடித்து வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டு 'டகால்ட்டி' 31ஆம் தேதியும் 'சர்வர் சுந்தரம்' அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்றார்.

இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், கடந்த வாரத்தில் திரையரங்கில் சென்று படம் பார்த்தேன் ஒரு பெரிய நடிகரின் படம் கூட்டமே இல்லை. அது யார் என்று சொல்லவில்லை ஏன் என்றால் அவர்கள் கடவுளடமிருந்து வந்தவர்கள் அவர்களை பற்றி நல்லதை மட்டும்தான் கூற வேண்டும்.

தமிழ் ராக்கர்ஸையும் கேபிள் டிவியில் புதிய படங்களை திரையிடுபவர்களையும் தமிழ்நாடு காவல் துறையினர் குழு அமைத்து பிடிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள் 'ஓடி ஓடி உழைக்கணும்' படம் பாதியில் நிற்கிறது. அந்தப் படத்தின் தயாரிபாளர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். வட்டிக்கு வாங்கி நடிகருக்கு அட்வான்ஸ் கொடுத்த பணத்தின் வட்டியே மூன்று மடங்கு ஆகிவிட்டது. பணம் பெரிய விஷயமில்லை தர்மமே பெரிது.நானே ஒரு கோடி கொடுத்துள்ளேன்.

இந்த படத்தை பணம் கேட்காமல் நடிகர் சந்தானம் முடித்து கொடுக்க வேண்டும். படம் வெளியீட்டிற்கு முன் சம்பள பணத்தை நாங்களே வாங்கி கொடுக்கிறோம். வயதில் சிறியவராக இருந்தாலும் அவர் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Intro:பாதியில் நிற்கும் படத்தை நடிகர் சந்தானம் முடித்து கொடுக்க வேண்டும் என அவர் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் - கே ராஜன்Body:டக்கால்டி சர்வர் சுந்தரம் படம் பிரச்சினை தொடர்பாக சென்னை வடபழனியிலுள்ள பிரசாத் லேபில் இயக்குனர் பாரதிராஜா , டகால்டி திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.செளத்திரி மற்றும் சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் , தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன் ஆகியோர் பத்திரிகையாளரை சந்தித்து பேசினர் அப்போது .

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில்.

31ஆம் தேதி சர்வர் சுந்தரம் மற்றும் டகால்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாவதாக இருந்தது இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் ஒரே கதாநாயகன் நடித்து வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டு டகால்ட்டி 31ஆம் தேதியும் சர்வர் சுந்தரம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாகும்..

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில்,

கடந்த வாரத்தில் திரையரங்கில் சென்று படம் பார்த்தேன் ஒரு பெரிய நடிகரின் படம் கூட்டமே இல்லை. அது யார் என்று சொல்லவில்லை ஏன் என்றால் அவர்கள் கடவுடமிருந்து வந்தவர்கள் அவர்களை பற்றி நல்லதை மட்டும் தான் கூற வேண்டும் என்றார்.

முதல்வருக்கு வேண்டுகோள் . அமைச்சர் கடம்பூர் ராஜீவும் நன்றாக துறை க்கு செய்கிறார்.
அரசு கேபிலில் புதிய படம் போடுவர்களை தடுக்க காவல்துறை குழு அமைத்து பிடிக்க வேண்டும் தமிழ்ராக்கஸையும் பிடிக்க வேண்டும் .

சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள்
ஓடி ஓடி உழைக்கனும் படம் பாதியில் நிற்கிறது. அந்தப்படத்தின் தயாரிபாளருக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். வட்டிக்கு வாங்கி நடிகருக்கு அட்வான்ஸ் கொடுத்த பணம் வட்டியே மூன்று மடங்கு ஆகிவிட்டது . பணம் பெரிய விஷயமில்லை தர்மமே பெரிது.நானே ஒரு கோடி கொடுத்துள்ளேன். அதற்காக சொல்லவில்லை இந்த படத்தை பணம் கேட்காமல் நடிகர் சந்தானம் படத்தை முடித்து கொடுக்க வேண்டும். படம் வெளியீட்டிற்கு முன் போன சம்பள பணத்தை நாங்களே வாங்கி கொடுக்கிறோம் Conclusion:வயதில் சிறியவராக இருந்தாலும் அவர் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.