ETV Bharat / sitara

எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையுடன் புதிய வாழ்கையை தொடங்குகிறேன் - 'தில்' ராஜூ - சினிமா செய்திகள்

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான 'தில்' ராஜூவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

dil raju
dil raju
author img

By

Published : May 11, 2020, 11:52 AM IST

தமிழில் வெளியான 'அபியும் நானும்', 'பெங்களூர் நாட்கள்' ஆகிய படங்களை தயாரித்தவர் 'தில்' ராஜூ. 2003ஆம் ஆண்டு தெலுங்கில் 'தில்' என்னும் படத்தை முதன் முதலில் தயாரித்ததால் 'தில்' ராஜூ என்று அழைக்கப்படுகிறார். முன்னணி நாயகன் படங்கள் மட்டுமல்லாது வித்தயாசமான கதைகள் கொண்ட பல சிறு பட்ஜெட் படங்களை ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். தமிழில் வெளியான '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு' படத்தை தயாரித்திருந்தார். 'பிங்க்' தெலுங்கு ரீமேகான 'லாயர் சாப்' படத்தை தற்போது தயாரித்து வருகிறார்.

2017 ஆம் ஆண்டு இவருடைய முதல் மனைவி அனிதா மாரடைப்பால் காலமானார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். முதல் மனைவியின் மரணத்திற்கு பின் தனியாக வசித்து வந்தார். சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் இவரது இரண்டாவது திருமணம் குறித்து பல வதந்திகள் பரவின.

இதனையடுத்து நேற்றிரவு (மே 10) நிஜாமாபாத்தில் அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இரண்டாவது திருமணம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தில் ராஜூ, "உலகமே தன்னுடைய இயக்கத்தை நிறுத்தியுள்ள இந்த வேலையில் நம்மில் பலருக்கு தொழில் ரீதியாக எதுவும் சிறப்பாக இல்லை. இப்போதைக்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்வும் மகிழ்ச்சிகரமாக இல்லை. ஆனால் விரைவில் அனைத்தும் நல்லபடியாக மாறும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கை தரும் உற்சாகத்துடன் ஒரு புதிய தொடக்கமாக என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் மீண்டும் தொடங்குகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.