ETV Bharat / sitara

ஈஸ்வரன் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு! - production unit

சென்னை: ஈஸ்வரன் படத் தயாரிப்பாளருக்கும் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் பிரச்னை தொடர்வதால், திட்டமிட்டபடி ஈஸ்வரன் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.

ஈஸ்வரன் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு!
ஈஸ்வரன் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு!
author img

By

Published : Jan 12, 2021, 10:42 PM IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் என்பவர் தயாரித்திருந்தார். சுமார் 28 கோடி வரை செலவு செய்து எடுத்த தயாரிப்பாளருக்கு 20கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருந்தார். படத்தின் நாயகன் சிம்பு முறையாக படப்பிடிப்புக்கு வராமல் இருந்ததால்தான் நஷ்டம் ஏற்பட்டதாதவும் நஷ்ட ஈடாக சிம்பு தனது சம்பளத்தை திருப்பி தர வேண்டும் எனவும் தயாரிப்பாளர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

இந்நிலையில், இன்று (ஜனவரி 12) செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், விஜயின் படத்திற்காக ஈஸ்வரன் படத்தை வெளிவராமல் தடுக்க சதி நடப்பதாக கண்ணீர் மல்க கூறினார். மேலும் தயாரிப்பாளர் கவுன்சிலை வைத்து மைக்கேல் ராயப்பன் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் கடிதம்
தயாரிப்பாளர் சங்கத்தின் கடிதம்

டி. ராஜேந்தருக்கு பதில் அளிக்கும் விதமாகவும் தமது தரப்பு நியாயத்தை தெரிவிக்கும் விதமாகவும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "படத்தின் நஷ்டத்தால் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பிதர வேண்டியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் கவுன்சிலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் சிம்பு தரவேண்டிய ரூ.7 கோடியை மூன்று தவணையாக செலுத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது. அதாவது சிம்பு அடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் வாங்கும் சம்பளத்தில் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளில் செலுத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் செய்தியாளர் சந்திப்பு

மேலும் ஈஸ்வரன் படத்திற்காக சிம்புவிற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் 4 கோடி சம்பள பாக்கி தரவேண்டியுள்ளதாகவும் அதில் ரூ.2.40 கோடியை கவுன்சிலுக்கு தந்துவிடுவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அதனை தர மறுக்கிறார். எனவே தாம் தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகியுள்ளேன்" என்றார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் தரப்பு சங்கம் க்யூப் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டுப் பணிகளை தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் பெற்ற பின்பு மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓடிடி ரிலீஸ் பிரச்னையில் சிக்கிய ஈஸ்வரன் படம் அதிலிருந்து மீண்டு ரிலீசுக்கு தயாராகியது. தற்போது மீண்டும் ஒரு பிரச்னை முளைத்துள்ளதால் திட்டமிட்டபடி நாளை மறுநாள்(ஜன.14) ஈஸ்வரன் திரைக்கு வருமா என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.