ETV Bharat / sitara

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து விலகிய பிரியங்கா - காரணம் என்ன தெரியுமா? - தொகுப்பாளினி பிரியங்கா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்துவந்த தொகுப்பாளினி பிரியங்கா திடீரென நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார்.

பிரியங்கா
பிரியங்கா
author img

By

Published : Sep 18, 2021, 12:15 PM IST

பிரபலத் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகப் பணியாற்றிவருபவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவந்தார்.

இதனிடையே பிரியங்கா பிக்பாஸ் 5ஆவது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாகக் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டுவருகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் பிரியங்கா தெரிவிக்காததால், அவரது ரசிகர்கள் குழம்பிவந்தனர்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து பிரியங்கா விலகியுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்குப் பதிலாக 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமான சிவாங்கி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிவாங்கி வெளியிட்ட பதிவு
சிவாங்கி வெளியிட்ட பதிவு

இதனை சிவாங்கியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிசெய்திருக்கிறார். அவரது அறையில் தொகுப்பாளினி சிவாங்கி என ஒட்டப்பட்டிருந்ததைப் புகைப்படமாக எடுத்துப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், 'எந்த மேடையில் போட்டியாளராக இருந்தேனோ, அதே மேடையில் தொகுப்பாளினியாக மாறியுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இப்பதிவின் மூலம் பிரியங்கா பிக்பாஸ் 5ஆவது சீசனில் கலந்துகொள்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: அம்மாடியோவ்... 1 நாளைக்கு கமலுக்கு இவ்வளவு கோடியா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.