ETV Bharat / sitara

நாரப்பாவின் மனைவி பச்சையம்மாவாக உருமாறிய பிரியாமணி - நாரப்பா படத்தில் பிரியாமணி கேரக்டர்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பிரியாமணியின் புதிய படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது.

Priyamani in narappa
Actress priyamani latest news
author img

By

Published : Jun 4, 2020, 10:10 PM IST

சென்னை: பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் அளித்துள்ளார் நடிகை பிரியாமணி.

தென்னிந்திய சினிமாக்களில் கலக்கி வந்த பிரியாமணி திருமணம் செய்துகொண்ட பின்பு இடையில் காணாமல் போயிருந்தார். இதையடுத்து, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் மூலம் மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பிய அவர், தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று (ஜூன் 4) பிறந்தநாள் கொண்டாடும் பிரியாமணி ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக தற்போது அவர் நடித்து வரும் இரண்டு முக்கியமான படங்களின் போஸ்டரும், அவரது கேரக்டர் லுக்கும் படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் தனுஷ் நடிப்பில் சூப்பர்ஹிட்டான 'அசுரன்' தெலுங்கு ரீமேக்காக உருவாகி வரும் ‘நாரப்பா’ படத்தில் மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்கிறார் பிரியாமணி.

இதேபோல் ராணா டகுபதி, சாய் பல்லவி நடிக்கும் ‘விரட்டபர்வம்’ என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து பிரியாமணியின் இந்த இரண்டு லுக்குகளின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இணையத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்கள் பிரியாமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.

‘நாரப்பா’ படத்தில் தனுஷ் கேரக்டரில் நடிக்கும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இந்த இருபோஸ்டர்களையும் பகிர்ந்து பிரியாமணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

'பருத்திவீரன்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்று ரசிகர்களைக் கவர்ந்த பிரியாமணி, தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.