வெறும் இருவது வயதில் சமூக வலைதளத்தையே கண்ணடித்து கவிழ்த்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அவர் நடித்த முதல் படமான 'ஒரு அடர் லவ்' திரைப்படம், வெளிவரும் முன்பே சமூக வலைத்தளம் இவரின் கண்ணழகில் கிறங்கிப்போயிருந்தது. இந்தப்படம் தெலுங்கில் 'லவ்வர்ஸ் டே (Lover's Day)' என்று டப் செய்யப்பட்டது.
பிரியா பிரகாஷுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக 'க்ரேஸ்' இருந்தும் 'ஒரு அடர் லவ்' பிளாப்பாகி மண்ணைவாரிக்கொண்டது.
இதைத்தொடர்ந்து, எந்த பெரிய இயக்குநர்களும் பிரியாவை தங்கள் படத்திற்காக ஒப்பந்தம் செய்ய அனுகவில்லை. தற்போது தெலுங்கு திரையுலகில் தனது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் நடிகர் நிதினுடன் நடிக்க பிரியா பிரகாஷ் வாரியர், இயக்குநர் சந்திரசேகர் யெலெட்டியோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் முதல் ஹீரோயினாக நடிக்க இரண்டாவது இடத்தில் தான் பிரியா உள்ளாராம்.
இதையும் படிங்க: லண்டனைக் கலக்கிய பாகுபலி: லேட்டஸ்ட் புகைப்படங்கள்!