சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நுழைந்தவர் நடிகை பிரியா பவனி ஷங்கர். இவர் தற்போது கமல்ஹாசனின் 'இந்தியன் 2', 'பொம்மை' படத்தில் நடித்துவருகிறார். இவர் ராஜவேல் என்பவரைக் காதலித்து வந்ததாகவும் ஆனால் அந்தக் காதல் முறிந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் அடிக்கடி தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அவர் குறித்து ஏதாவது ஒரு பதிவைப் பகிர்ந்துவந்தார்.
இந்த நிலையில் நேற்று ராஜவேல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை பிரியா பவனி ஷங்கர் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவுசெய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "நம் கல்லூரி நாள்களில் மிகவும் மகிழ்ச்சியான, சராசரி அழகு இல்லாத என்னை நீ காதலித்தது அவ்வளவு ஆச்சரியமாகத் தெரியவில்லை. ஆனால் அதே அன்போடு இன்றும் நீ என்னுடன் இருப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சித் தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவள் வாழ்க்கையில் உன்னைப்போல் ஒரு ஆண் இருக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். நட்சத்திரம் நிறைந்த என் உலகில் நீ தான் என் சூரிய ஒளியாக இருக்கிறாய்" என்று பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட இணையதளவாசிகள், 'இது காதலா அல்லது நட்பு கலந்த காதலா' என்று தெரியாமல் குழம்பிவருகின்றனர்.
இதையும் படிங்க: கையில் வாளுடன் நிற்கும் தனுஷ்: வைரலாகும் கர்ணன் ஷூட்டிங் புகைப்படம்!