'8 தோட்டாக்கள்' படத்தை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர், ஸ்ரீகணேஷ். இவரின் இயக்கத்தில் உருவாகி வரும் படம், குருதி ஆட்டம்.
இதில் நாயகனாக அதர்வா நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் டப்பிங் வேலை தொடங்காமல் இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கரோனா ஊரடங்கில் தளர்வு அளித்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு அனுமதி கொடுத்ததால் இப்படத்தின் டப்பிங் வேலையைப் படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி முதல் ஆளாக படத்தின் டப்பிங்கை, நடிகை பிரியா பவானி சங்கர் பேசி முடித்துள்ளார்.
இந்நிலையில் 'குருதி ஆட்டம்' விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.