கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது சீனாவில் படிப்படியாகக் குறைந்துவருகிறது. இருப்பினும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டு வந்தாலும், வைரஸ் தொற்று குறித்து தவறான தகவல்களும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவிவருகிறது. இருப்பினும் சமூக வலைதளத்தில் கரோனா குறித்து விழிப்புணர்வு மீம்ஸ்களும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இதனையடுத்து நடிகை பிரியா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் தங்களைத் தனிமைப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீம்ஸ் மூலமாகவும் கருத்துகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அனைவருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.