ETV Bharat / sitara

ஜோர்டனில் மாட்டிக்கொண்ட 'ஆடுஜீவிதம்' படக்குழுவினர் - ஆடு ஜீவிதம் படக்குழுவினர் ஜோர்டனில் தவிப்பு

கேரளாவிலிருந்து ஒருவர் உதவியோடு சவூதி அரேபியாவுக்குச் செல்லும் நஜீப் முகமது என்னும் இளைஞனின் துயர்மிகு நாள்களைப் பற்றி கூறும் 'ஆடு ஜீவிதம்' படக்குழுவினரே தற்போது ஒரு துயரமான நிகழ்வு காரணமாக ஜோர்டனில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

AaduJeevitham
AaduJeevitham
author img

By

Published : Apr 1, 2020, 11:55 AM IST

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகிவரும் ஆடு ஜீவிதம் படத்தின் படக்குழுவினர் ஜோர்டனின் சிக்கியுள்ளனர்.

மலையாள எழுத்தாளர் பெனியமின் எழுதிய நாவல் 'ஆடு ஜீவிதம்’ (Goat days). மலையாளத்தில் உருவான இந்தப் புதினம், ஆங்கிலம், அரபி, தமிழ், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதினத்தை அதே பெயரில் படமாக்கவுள்ளார், இயக்குநர் பிளெஸ்ஸி. பிரித்விராஜ் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கேரளாவிலிருந்து ஒருவர் உதவியோடு சவூதி அரேபியாவுக்குச் செல்லும் நஜீப் முகமது என்னும் இளைஞனின் துயர்மிகு நாள்களைப் பற்றி கூறுகிறது 'ஆடு ஜீவிதம்' புதினம். இதில் இன்னும் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும் உள்ளன.

'ஆடு ஜீவிதம்’ படத்திற்காக 20 கிலோ எடை குறைந்து, அதிக தாடியுடன் காணப்படுகிறார், பிரித்விராஜ். வாசகர்களுக்குப் படிக்க படிக்க ஆவலை அதிகரித்த கதை என்பதால், அதன் தன்மை மாறாமல் எடுக்க விரும்புகிறது இதன் படக்குழு. அதனால் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு படம் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டன் பாலைவனத்தில் நடைபெற்றுவருகிறது. தற்போது உலகப்பெருந்தொற்றான கரோனா காரணமாக அனைத்துவித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் ஜோர்டன் அரசு ஆடு ஜீவிதம் படக்குழுவினரின் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லியுள்ளது.

தற்போது ஜோர்டனில் பிரித்விராஜ், இயக்குநர் பிளெஸ்ஸி உள்ளிட்ட படக்குழுவினர் 58 பேர் அங்கு மாட்டிக்கொண்டுள்ளனர். இந்தியாவில் தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சர்வதேச விமான போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஜோர்டனில் மாட்டிக்கொண்ட ஆடு ஜீவிதம் படக்குழுவினர் விரைவில் இந்தியா திரும்ப அங்குள்ள தூதரகம் உதவிசெய்து-வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.