மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் படம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து முதல் நாள் அனுபவம் குறித்து படத்தின் இயக்குநர் பிரித்விராஜ் கூறியுள்ளார்.
நடிகர் பிரித்விராஜ் மோகன்லாலை வைத்து முதன் முதலாக இயக்கியப்படம் லூசிஃபர். இப்படத்தில் மஞ்சுவாரியார், டொவினோ தாமஸ், இந்திரஜித், விவேக் ஓபராய் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் வெளியான சில நாட்களிலேயே ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்தது. 2019ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியானது. இதன் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் தயாராக உள்ளது.
இதையடுத்து இன்றுடன் (மார்ச் 28) இப்படம் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவுசெய்துள்ளது. தான் இயக்குநராக அறிமுகமான இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி குறித்து இயக்குநரும் நடிகருமான பிரித்விராஜ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் நினைவுக் கூர்ந்துள்ளார்.
- — Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 27, 2020
">— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 27, 2020
அதில், "கடந்த வருடம் இதே நேரத்தில் லூசிஃபர் படத்தை ஒவ்வொரு திரையரங்கிற்கும் அனுப்பி வைத்தோம். மூன்று மாத நீண்ட ஓய்வில்லாத இரவு, பகல் தயாரிப்பு வேலைகள் முடிந்த தருணம் அது. எனது ஒளிப்பதிவாளர், துணை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர், கிராஃபிக்ஸ் கலைஞர் உள்ளிட்டோரின் ஆதரவில்லாமல் என்னால் இப்படத்தை முடித்திருக்க முடியாது.
ஒரு வருடம் கழித்து உலகம் வித்தியாசமாக இருக்கிறது. நான் 30 கிலோ எடை குறைத்திருக்கிறேன். சூழல் கடினமாக இருக்கிறது. உங்களை உத்வேகப்படுத்தும் நினைவுகள் தான் எப்போதும் முக்கியம் என நினைக்கிறேன். அடுத்த நாள் காலை தூக்கமின்றி, கலக்கமான நிலையில் நானும் சுப்ரியாவும்(மனைவி) எர்ணாகுளத்தில் உள்ள கவிதா திரையரங்கில் எனது முதல் இயக்கத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கச் சென்றோம்.
அவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவில் லாலேட்டன் எங்களுடன் இணைந்து படம் பார்த்ததன் மூலம் என் வாழ்நாளில் மிகச்சிறந்த ஆச்சரியங்களில் ஒன்றைத் தந்தார். இதுவரை சினிமாவில் ஒரு நீண்ட பயணமாக இருந்திருக்கிறது. ஆனால் 23/03/2019 நான் சாகும்வரை விசேஷமானதாக இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.
பிரித்விராஜ் தற்போது 'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டன் நாட்டில் உள்ளார்.