பிரபுதேவா முதன்முறையாக காவல் துறை அலுவலராக நடித்துள்ள படம் 'பொன் மாணிக்கவேல்'. ’கண்டேன்' பட இயக்குநர் ஏ.சி. முகிலன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும், சுரேஷ் சந்திர மேனன், இயக்குநர் மகேந்திரன், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'பொன் மாணிக்கவேல்' நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, இதன் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காரணம் நிதிச்சிக்கல் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக ’பொன் மாணிக்கவேல்’ கடந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எழுந்த சில பிரச்னைகள் காரணமாக படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வலிமை பட ஷூட்டிங் புகைப்படங்கள் லீக் - அதிர்ச்சியில் படக்குழு!