ETV Bharat / sitara

சமந்தாவுக்காக விட்டுக்கொடுத்த பிரபாஸ்: என்ன தெரியுமா?

author img

By

Published : Feb 6, 2020, 3:08 PM IST

ஐதராபாத்: ரசிகர்கள் மனதில் இடம்புகுந்த '96' பட ஜானு கேரக்டரை அப்படியே தலைப்பாக வைக்க நடிகர் பிரபாஸ் தனது படத்துக்காக வைத்திருந்த 'ஜான்' என்ற தலைப்பை விட்டுக்கொடுத்துள்ளார்.

Prabhas sacrificed his title for Samantha Jaanu movie
samantha and Prabhas

தமிழில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான '96' படம் தெலுங்கில் 'ஜானு' என்று பெயரில் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வாணந்தும், திரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளனர்.

'96' படத்தில் திரிஷாவின் பெயர் ஜானகி தேவி. படம் முழுக்க ஜானுவாக வலம் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார். மேலும், பலரையும் ஜானுவாக டிக் டாக் விடியோக்களில் உருவெடுக்க வைத்தார்.

ரசிகர்கள் மனதில் இடம்புகுந்த ஜானு என்ற தலைப்பை தெலுங்கிலும் வைக்க முடிவு செய்தனர். ஆனால் நடிகர் பிரபாஸ் தற்போது பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடித்து வரும் ரொமாண்டிக் திரைப்படத்துக்கு ஜான் என தலைப்பு வைத்திருந்தனர்.

இதையடுத்து இரு படங்களின் தலைப்பும் ஒரே மாதிரி இருந்த நிலையில், சமந்தாவின் ஜானு படத்துக்காக தனது படத்தின் தலைப்பை விட்டுக்கொடுத்துள்ளார் பிரபாஸ். இந்த தலைப்பை தாங்களுக்கு வழங்குமாறு பிரபாஸிடம் கேட்டதாகவும், இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் உடனடியாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் ஜானு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கூறினார்.

தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் நாளை (பிப். 7ஆம் தேதி) திரைக்கு வருகிறது.

96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, ஜானு படத்துக்கு இசையமைக்க, தமிழில் இயக்கிய பிரேம் குமார் தெலுங்கிலும் இயக்கியுள்ளார். படத்தின் டீஸர், ட்ரெய்லர், புரொமோ பாடல்கள் என அனைத்தும் தமிழ் ரசிகர்களைப் போல் தெலுங்கு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

Intro:Body:

 Prabhas sacrifice for samantha movie   Samantha in Jaanu movie 96 movie telugu remake Samantha Jaanu relase சமந்தா படத்துக்காக தலைப்பை விட்டுக்கொடுத்த பிரபாஸ் ஜானு படத்தில் சமந்தா 96 தெலுங்கு ரீமேக்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.