ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பெரும் பொருள்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, இத்தாலி, பாரீஸ் போன்ற வெளிநாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யூவி கிரியேஷன்ஸ் தயாரித்து வரும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், போன்றவை சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், 'ராதே ஷியாம்' படத்தின் டீசர் பிரபாஸின் பிறந்தநாளான அக்டோபர் 23ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
-
Who is Vikramaditya? 🤔 Stay tuned to find out in the #RadheShyam teaser, out on 23rd October! ☺️💕 Enjoy the teaser in English with subtitles in multiple languages! #GlobalPrabhasDay
— Radhe Shyam (@RadheShyamFilm) October 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/g6mSxpraaG
">Who is Vikramaditya? 🤔 Stay tuned to find out in the #RadheShyam teaser, out on 23rd October! ☺️💕 Enjoy the teaser in English with subtitles in multiple languages! #GlobalPrabhasDay
— Radhe Shyam (@RadheShyamFilm) October 20, 2021
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/g6mSxpraaGWho is Vikramaditya? 🤔 Stay tuned to find out in the #RadheShyam teaser, out on 23rd October! ☺️💕 Enjoy the teaser in English with subtitles in multiple languages! #GlobalPrabhasDay
— Radhe Shyam (@RadheShyamFilm) October 20, 2021
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/g6mSxpraaG
டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை காணலாம். 'விக்ரமாதித்யா யார்?' என்ற கேள்வியோடு இது வெளியாகியுள்ளது.
'ராதே ஷ்யாம்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.