'தன்ஹாஜி' படத்தையடுத்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம், 'ஆதிபுருஷ்'. 'ராமாயணம்' கதையின் ஒரு பகுதியைப் படமாக்கும் இதில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலிகானும் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இப்படம், மிக பிரமாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதற்கிடையே, 'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில் தற்போது மீண்டும் தொற்று குறைந்துவரும் நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று (ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. இந்தசெய்தியைப் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களில் ட்விட்டரில் #Adipurush என்ற ஹேஷ் டாக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்துவிட்டன.
இதையும் படிங்க: ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: நடிகர் விஷால் ட்வீட்!