நடிகர் பிரபாஸ், இயக்குநர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'பிரபாஸ் 20' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை யூவி கிரேஷன்ஸ் தயாரிக்கிறது.
இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் பெரும் பொருட்செலவில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் திரைப்படங்களை எடுக்க அரசுகள் அனுமதி வழங்கியதால் மீண்டும் இந்தப் படக்குழு படப்பிடிப்பிற்கு தயாராகியுள்ளது.
