ETV Bharat / sitara

'பிசாசு-2' - பேயாக நடிப்பவர் இவர்தானாம்! - பிசாசு திரைப்படத்தில் பேயாக நடிக்கும் பூர்ணா

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'பிசாசு-2' திரைப்படத்தில் பேயாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

poorna to act ghost in Myskkins Pisasu 2

author img

By

Published : Dec 18, 2020, 1:41 PM IST

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'சைக்கோ' திரைப்படம், இயக்குநர் மிஷ்கினுக்கு நல்ல பாராட்டை பெற்றுத் தந்தது. இதையடுத்து 2014ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் மிஷ்கின் தீவிரம் காட்டிவருகிறார்.

ராக்ஃபோர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா நடிக்க உள்ளார். ராஜ்குமார் பிச்சுமணி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தில் பேயாக நடிக்க இருப்பவர் யார் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ள நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. தற்போது உருவாகும் 'பிசாசு' திரைப்படத்தில் நடிகை பூர்ணா பேயாக நடிக்க இருக்கிறாராம். முன்னதாக வெளியான பிசாசு திரைப்படத்தில் ப்ரக்யா மார்டின் பேயாக நடித்தார்.

பூர்ணாவும் மிஷ்கினும் 2018ஆம் ஆண்டு வெளியான 'சவரக்கத்தி' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க... பூஜையுடன் தொடங்கியது மிஷ்கினின் ‘பிசாசு 2’

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.